முக்கிய அறிவிப்பு! சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி:

 

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதிகள் பற்றி டிசம்பர் 31ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. கொரோனா காரணமாக சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளை மத்திய அரசு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

      பிறகு, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக அரசு தெரிவித்தது. இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்சி 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்சி ஏற்பாடு செய்து வருகிறது. இதுகுறித்து கலந்தாலோசித்தபிறகு தேர்வு குறித்து முடிவுசெய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

      இந்நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியாகும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு. சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வு தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.






hi

Comments

  1. I purchased herpes herbal medicine and received it within 7 days and used it as prescribed, I tested negative within 3 weeks use, do not loose hope to contact him early If you need help meet him on his email address dr,chalaherbalhome@gmail.com Or on his website https://
    drchalaherbalhome.godaddysites.com or https://mywa.link/dr.chalaherbalhome ❤️❤️❤️����������

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TN STATE BOARD 12 TH STD MATHS ALL CHAPTERS EXERCISE WISE SLIP TEST QUESTION PAPERS 2021 - 2022